66. மங்கையர்க்கரசியார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 66
இறைவன்: சோமநாதர்
இறைவி : சோமகமலாம்பிகை
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : மன்னர்
அவதாரத் தலம் : கீழப்பழையாறை
முக்தி தலம் : மதுரை
செய்த தொண்டு : குரு வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : சித்திரை - ரோகிணி்
வரலாறு : மானி என்றும் தனியரசி என்றும் திருஞானசம்பந்தரால் இவர் போற்றப்படுகிறார். பாண்டிய மன்னனின் மனைவி. பாண்டியன் சமணம் துறந்து சைவம் திரும்பக் காரணமாக இருந்தவர்.
முகவரி : அருள்மிகு. சோமேசர் திருக்கோயில், கீழப்பழையாறை – 612001 கும்பகோணம் வட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திருமதி. என்.தேவிகாராணி
5.காந்தி பூங்கா மேற்கு
கும்பகோணம்
தொலைபேசி : 0435-3919971
அலைபேசி : 9994847404, 9344436299

இருப்பிட வரைபடம்


மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
    வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
    தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
    இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
    போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே.

- பெ.பு. 4194
பாடல் கேளுங்கள்
 மங்கையர்க்கு


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க